கோயில் கலைப் பாடம் இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக் கலை சிற்பக் கலை ஓவியக் கலை மற்றும் ஆகம விதிகள் ஆகிய அடிப்படைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. திராவிடக் கோயில் கட்டடக் கலை பாணிகள் (பல்லவர், சோழர், பாண்டியர் விஜயநகர மற்றும் நாயக்கர் காலம்) கருவறை வடிவமைப்பு விமானம், கோபுரம் மண்டபங்கள் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் மகத்துவம் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் ஆகியவற்றை இப்பாடம் விரிவாக விளக்குகிறது.

தமிழகத்தின் தொன்மையான வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, பொருளாதாரம், கலை, இலக்கியம், சமயம், மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளை அறிமுகப்படுத்தும் பாடமாகும். சங்ககாலம் முதல் நவீன காலம் வரை தமிழரின் வாழ்க்கைமுறை, அரசாட்சிகள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள், கட்டிடக்கலை, விழாக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை இப்பாடம் விளக்குகிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளம், மரபு மற்றும் நாகரிகச் சிறப்புகளைப் புரிந்துகொள்ள இப்பாடம் வழிகாட்டுகிறது.

இப்பாடம் இக்காலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு இலக்கிய வடிவங்கள், அவற்றின் வளர்ச்சி மற்றும் சமகாலச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துகிறது. கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை மற்றும் இலக்கியத் திறனாய்வின் இலக்கிய, சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்களை மாணவர்கள் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. இலக்கியங்களை விமர்சன நோக்கில் அணுகும் திறன், ஆய்வுமனப்பான்மை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கிறது. மேலும், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மதிப்புகளையும் சமூகப் பங்களிப்புகளையும் ஆழமாக உணர்ந்து பயன்படுத்தும் திறனை மேம்படுத்துகிறது.